பக்கங்கள்

திங்கள், 31 மே, 2010

உடற்கூறு தத்துவங்கள் 96

_______________________________________


1. பூதம் ************************ 5

2. புலன்கள்******************** 5

3. பொறிகள் ******************* 5

4. கன்மேந்திரியங்கள்********* 5

5. ஞானேந்திரியங்கள்********  5

6. கரணம்*********************  4

7. அறிவு **********************  1

8. நாடிகள் ******************** 10

9. வாயுக்கள் ***************** 10

10. ஆசயங்கள்*************** 5

11. கோசங்கள்*************** 5

12. ஆதாரம் *****************  6

13. தோசம் *****************  3

14. மலம் ******************* 3

15. மண்டலம் ************** 3

16. ஈடனை ****************  3

17. குணம்****************** 3

18. வினை ***************** 2

19. விகாரம் ***************  8

20. அவஸ்தை ************ 5

மொத்தம் 96


1) ஐம்புதங்கள்

        1.நிலம் 2. நீர் 3.தீ 4.காற்று 5.ஆகாயம்

**********

2) பொறிகள் 5

       1.மெய் 2.வாய் 3.கண் 4.மூக்கு 5.செவி

**********
3) புலன்கள் 5

       1. பார்த்தல் 2. கேட்டல் 3. சுவைத்தல் 4.நுகர்தல் 5. உணர்தல்

**********
4) கன்மேந்திரியங்கள் 5

      1.வசனம்: இது ஆகாயத்தினிடமிருந்து வசனிக்கும்.

      2. தானம்: இது வாயுவினிடமிருந்து இடுதல், ஏற்றல் செய்யும்.

      3. கமனம்: இது தேயுவினிடமிருந்து நின்று நடப்பிக்கும்.

      4. விசர்கம்:இது அப்புவினிடமிருந்து நின்று மலசலங்களை கழிக்கும்.

      5. ஆனந்தம்:இது பிருதிவியினிடமிருந்து நின்று மர்மஸ்தானங்கலில் ஆனந்தத்தை விளைவிக்கும்

**********
5) ஞானேந்திரியங்கள் 5

      1. சப்தம்: இதை ஆகாயத்தினிடமிருந்தறிவது.

      2. ஸ்பரிசம்: இதை வாயுவினிடமிருந்து அறிவது.

      3. ரூபம்: இதை தேயுவினிடமிருந்து அறிவது.

      4. ரசம்: இதை அப்புவினிடமிருந்து அறிவது.

      5.கந்தம்: இதை பிருதிவியினிடமிருந்து அறிவது.

**********
6) கரணம் 4

      1. மனம்: இது வாயுவின் கூறாக அலைந்து விசையங்களை நினைக்கும்.

      2. புத்தி: இது தேயுவின் கூறாக ரூப பேதங்களை தெரிவிக்கும்.

      3. அகங்காரம்: இது பிருதிவியின் கூறாக விசையங்களை கொண்டெலுப்பும்.

      4. சித்தம்: இது அப்புவின் கூறாக விசையங்களை பற்றசெய்யும்.

**********

7) அறிவு 1


           உள்ளம்: இது ஆகாயத்தின் அம்சமகையல் உச்சியில் நின்று சகல விசயங்களையும் நோக்கும். பகுத்தறிவிக்கும்.

**********
8)நாடிகள் 10

1. இடகலை: இந்த வத நாடியானது வலது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் மார்க்கமாய் இதயத்திற்கு சென்று, இடப்புறமாய் கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள சந்திர மண்டலத்தை அடைந்து இடது நாசியின் வழியாக சென்று இடக்கரத்தில் பாயும்.2. பிங்கலை: இந்த பித்த நாடியானது இடது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் வழியாய் இதயத்தின் வலப்புறமாக கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள அக்கினி மண்டலத்தை அடைந்து வலது நாசியின் வழியாக சென்று வலக்கரத்தில் பாயும்.3. சுழிமுனை: இந்த கப நதியானது இவ்விரண்டிற்கும் இடையே மூலாதாரத்தில் நின்று உச்சிவரை ஓடி சூரிய மண்டலத்தை அடைந்து வலது, இடது நாசித்துவாரங்களுக்கு இடையே இயங்கி நாடு நாடியாய் தையில் முட்டி நிற்பது.4. சிங்குவை: உள் நாக்கில் நின்று உணவு, நீர் ஆகியவற்றை விழுங்கச் செய்யும்.5. புருடன்: மூலாதாரத்தில் தொடக்கி வலது கண்ணில் நின்று பார்வையைதரும்.6.காந்தாரி: மூலாதாரத்தில் தொடக்கி இடது கண்ணில் நின்று பார்வையைதரும்.7.அத்தி: மூலாதாரத்தில் தொடக்கி வலது காதில் நிற்கும்.8. அலம்புடை: மூலாதாரத்தில் தொடக்கி இடது காதில் நிற்கும்.9. சங்கினி: குறியில் நின்று கொடிபோல் சுற்றிக்கொண்டிருக்கும்.10. குருநாடி: மூலாதாரத்தில் தொடக்கி அபானத்தில் நிற்கும்.

**********
9) வாயுக்கள் 10

1) பிராண வாயு: மூலதாரத்தில் தோன்றி மூக்கின் வழியே 12 சென்று மீண்டும் 8 உள்ளே பாய்ந்து 4 அங்குலம் வீணாகும். காற்று வாங்குதலும், விடுதலும் செய்யும். இது தலை, மார்பு, தொண்டை இவற்றில் தங்கும். புரிந்து கொள்ளல் இருதய இயக்கம், உணர்வுகளை தூண்டுதல், மூளை இயக்கம், தும்மல், எப்பம்விடல் ஆகியவற்றை செய்யும். உண்ணும் பல்வேறு உணவுகளை எல்லாம் சீரணிக்கச்செய்யும். நீல நிறமாயிருக்கும். இதற்கு கடவுள் சந்திரன். நாழிகை 1 க்கு 360 சுவாசமாக 1 நாளுக்கு 21600 சுவாசம் உண்டாகும். அவற்றில் 14400 சுவாசம் உள்ளடங்கி 7200 சுவாசம் வெளியேசெல்லும்.இடம்: இருதயம், பித்தத்திற்கு ஆதாரம். வாயுவின் கூறு.2) அபானவாயு: உடலின் நடுவான ப்க்குவாசயத்தை இருப்பிடமகக்கொண்டு வயிறு முற்றிலும் வாழ்ந்து உண்ட உணவு, நீர்ப்பொருள்களை செரிப்பதற்குரிய அக்கினியை விருத்தி செய்து சரத்தையும், திப்பியையும் வெவ்வேறாக பிரித்து இடுப்பு, தொடை, பிறப்புறுப்புகள், அடிவயறு முதலிய உறுப்புகளை இயங்கச்செய்கிறது. கீழ் நோக்கிச்சென்று மலம், சிறுநீர், விந்து, சூதகம், சிசு முதலியவற்றை வெளிக்கொணரும். இதற்கு கடவுள்: வரதராஜன். வாதத்திற்கு ஆதாரம் . நெருப்பின் கூறு.3) வியான வாயு: இது தோளிலிருந்து 72000 நாடி நரம்புகளிலும் சென்று உடல் உறுப்புகளை நீட்டல், மடக்கல், நடத்தல், தோலில் நின்று உணர்சியரிதல், கண்சிமிட்டல், விழித்தல், முதலிய தொழில்களை செய்யும். உணவின் சாரத்தை இரத்தத்தில் பரப்பி உடலைக்காக்கும். கடவுள்: யமன். இருப்பிடம்: இருதயம். ஆகயத்தி கூறு.4) உதான வாயு: இது வயிற்றிலுள்ள சடராக்னியிலிருந்து தோன்றி உணவின் சாரத்தில் சேர்ந்து அதை ஆங்காங்கே நிறுத்தும். மார்புக்கு மேல் மூக்கு வரை மேல்நோக்கிச் சென்று கழுத்து, தொப்புழ், மூக்கு, மூதளியவ்றில் தங்கி பேச்சு, நினைவு உறுப்புகளை இயங்கசெய்கிறது. மனதிடம், உடல்திரம் முதலியவற்றை உண்டாக்குகிறது. நிறம்: மின்னல், கடவுள்: அக்கினிதேவன் மண்ணின் கூறு.

5) சமான வாயு: தொப்புழிலிருந்து கால் வரையிலும் சீரகப்பரவி பிரவாயுக்களை சமனப்படுத்தி நீர், உணவு முதலியவற்றை உடலில் சேர்க்கும். பசயுண்டக்கும். வயிறு, ஈரல் முதலிய உறுப்புகளில் அலைந்து திரியும். நிறம்: புட்பராகம். கடவுள்:சூரியன். கபத்திற்கு ஆதாரம்.

6) நாகன்: கலைகள் அனைத்தையும் கற்குமாறு அறிவை எழுப்பும். பண்களை பாடுவிக்கும். கண்ணிமைத்தல், மயிர் சிலிர்த்தல் முதலிய செயல்களை செய்விக்கும். பொன்னிறம். கடவுள்; அனந்தன்.

7) கூர்மன்: மனதில் தோன்றி கண்ணிலிருந்து இரு விழிகளைப் பார்க்கவும் இமைகளை மூடவும் செய்கிறது. கொட்டாவி விடல், வைமூடல், கண்நீர்விடல் முதலிய செயல்களைச் செய்யும். வெண்மை நிறம். கடவுள்: திருமால்.

கிரிகரன்: நாக்கு, மூக்கு இவற்றில் கழிவையுண்டக்கும். இருமல், தும்மல் வரச்செய்யும். நிறம்: கருமை. கடவுள்: சிவன்.

9)தேவதத்தன்: வட்டவடிவமாய்த் தோன்றி சோம்பளையுண்டக்கும். உடல் முரித்தலைச் செய்யும். தூங்கி எழுந்ததும் களைப்பை உண்டாக்கும். கண்ணை பல இடங்களிலும் உலவச் செய்யும். சண்டையிடல், வதடுதல் செய்யும். நிறம்; படிகம். கடவுள்: தேவேந்திரன்.

10) தனஞ்செய்யன்: வார்த்தைகளை நாவிலிருந்து எழுப்புதல் மூக்கை தடித்து வீங்கச்செய்தல், காதில் கடல்போல் இரைச்சலை உண்டாக்குதல் செய்யும். உடலில் இருந்து உயிர் நீங்கியபின் அனைத்து வாயுக்களையும் வெளிப்படுத்தி மூன்றாம் நாள் தலை வெடித்து பின் வெளியேறும். கடவுள்: தன்வந்திரி நிறம்: நீலம்.

**********
10) ஆசயங்கள் 5

1.அமராசயம்: (இரைப்பை) உண்ட உணவு செரிக்குமிடம்.

2. பகிராசயம்: (சிறுகுடல்) உணவின் சாரம் பிரியுமிடம்.

3. சலாசயம்: (நீர்ப்பை) நீர் பிரியுமிடம்.

4. மலாசயம்: (மலக்குடல்) மலம் பிரியுமிடம்.

5. சுக்கிலாசயம்:(சுக்கிலப்பை) சுக்கிலம் பிரியுமிடம்.

**********
10) ஆசயங்கள் 5


1.அமராசயம்: (இரைப்பை) உண்ட உணவு செரிக்குமிடம்.

2. பகிராசயம்: (சிறுகுடல்) உணவின் சாரம் பிரியுமிடம்.

3. சலாசயம்: (நீர்ப்பை) நீர் பிரியுமிடம்.

4. மலாசயம்: (மலக்குடல்) மலம் பிரியுமிடம்.

5. சுக்கிலாசயம்:(சுக்கிலப்பை) சுக்கிலம் பிரியுமிடம்.

**********
11. கோசங்கள் 5

1. அன்னமய கோசம்: தூல சரிரத்தை உடையது.

2. பிராணமயகோசம்: பிராண வாயுவும் கண்மேந்திரியங்களும் சேர்ந்தது.

3.மனோமய கோசம்: மனதும் கண்மேந்திரியங்களும் சேர்ந்தது.

4. விஞ்ஞானமய கோசம்: புத்தியும் பொறிகளும் சேர்ந்தது.

5. ஆனந்தமய கோசம்: காரண உடலுக்கு ஆதாரமானது.


**********
12) ஆதாரம் 61. மூலாதாரம்: இது காலெலும்பு இரண்டும் கதிரெலும்பு இரண்டும் கூடிய இடம், குய்யத்திற்கும், குதத்திற்கும் இடையே உள்ளது. குண்டலி வட்டமாய் அதன் நடுவே நாலிதழ்களை உடைய வட்டமான கடம்பம் பூவைப் போல இருக்கும். அந்த புஷ்பத்தின் நடுவில் ஓங்கார எழுத்தில் விநாயகர் தேவி வல்லபை தோன்றுவர்.

2.சுவாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு 2 விரல்கடை மேலுள்ளது. நாற்கொனமும் அதன் நடுவே 6 இதழ்களுடைய புஷ்பமும் நடுவில் லிங்க பீடமும் நகார எழுத்தும் நிற்கும். அந்த நகாரத்தின் நடுவில் பிரமன் தேவி சரஸ்வதி தோன்றுவர்.

3. மணிபூரகம்: சுவாதிஷ்டானத்திற்கு 8 விரற்கடை மேல் கோழிமுட்டை வடிவில் 1008 நரம்புகள் சூழ இருக்கும். பிறை வடிவம் அதன் நடுவே 10 இதழ்களுடைய புஷ்பமும், அதன் நடுவே மகார எழுத்தும் அதன் நடுவில் மகாவிஷ்ணு தேவி மகாலட்சுமி அமர்ந்திருப்பர்.

4. அனாகதம்: மணிபூரகத்திற்கு 10 விரற்கடை மேல் முக்கோண வடிவில் 12 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே சிகார எழுத்தும் அதன் நடுவில் ருத்திரனும் தேவி ருத்திரியும் அமர்ந்திருப்பார்.

5.விசுத்தி: அனாகதத்திற்கு 10 விரற்கடை மேல் கண்டஸ்தானத்தில் அறு கோணமாக இருக்கும். அதன் நடுவே 16 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே வகார எழுத்தும் அதன் நடுவில் மகேஷ்வரரும் தேவி ம்கேஷ்வரியும் இருப்பர்.

6. ஆக்கினை: விசுத்திக்கு 12 விரற்கடை மேல் இருக்கும். 3 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே யகார எழுத்தும் அதன் நடுவில் சதாசிவனும் தேவி மனோன்மணியும் இருப்பர்.

**********


3) தோஷம் 3


1.வாதம்: இது வாயுவினால் உற்பத்தியாகி பிராணவாயு பிரசண்டமாகி அக்கினியும் அப்புவுங்கலந்த போது உண்டாவதாம்.

2. பித்தம்: இது தேய்வோடு வாயு சம்பத்தப்பட்ட ஆதாரத்தை முதற்கொண்டு மிகவும் அசைந்து இதய கமலத்தில் ஊன்றியபோது உண்டாவதாம்.

3. கபம்: இது அப்பு, தேயு, வாயு இம்மூன்றும் உடலில் கலவாமல் கலக்கில் உண்டாவதாம்.

**********
14) மலம் 31.ஆணவம்: நான் என்ற அறியாமையை பிறப்பித்து தன்னுடைய மனைவி, மக்கள் பெரியதென மயக்கமுற்று அபிமானித்திருக்கும்.

2.காமியம்: இது தனது பார்வையால் கண்டவைகளை எல்லாம் அடைய நினைப்பதால் பாவ, புண்ணியங்களை உண்டாக்கவல்லது.

3.மாயை: இது தனது அல்லாததை எல்லாம் தனதாக பாவித்து பிறர்க்கு இடையூறு விளைவிப்பது.

**********

15) மண்டலம்: 31. அக்கினி மண்டலம்: இது மூலாதாரத்திற்கு மேலே சுவாதிஷ்டானத்திற்கு கீழே முச்சுடராய் உள்ளது.

2. சூரிய மண்டலம்: மனிப்பூரகத்திற்கும் அனாகதத்திற்கும் நடுவில் வளையமாக உந்திக்கு மேலே உள்ளது.

3. சந்திர மண்டலம்: இது விசுத்திக்கு மேலே ஆக்கினைக்கு கீழே சிரசின் மையத்தில் உள்ளது. இத்தனை அமுதகலை என்பர். இதன் நடுவில் பராசத்தி பிரசன்னமாகும்.

**********
16) ஈடணைகள் 31. தாரேஷனை: பெண்ணாசை கொள்ளல்.

2. புத்திரேஷனை: புத்திரர் மீது ஆசை கொள்ளல்.

3. அர்த்தேஷனை: பொருளாசை கொள்ளல்.

**********
17) குணம் 31. ராஜஷம்: இக்குணம் தர்மம் பிறர் உயிரை தன்னுயிரைப் போல் பாவித்தல் அகங்காரம் பகைவரை வெல்லல் பல சஸ்த்திரங்களை கற்றல் உன்மியாரிதல் புகழ் வேண்டல் முதலிய குணங்களை கொண்டிருக்கும்.

2. தாமசம்: இக்குணம் வஞ்சனை வழிகடந்து வாதாடல் சோம்பல் நித்திரை கடுங்கோபம் அதிக உணவு ஆகிய குணங்களை கொண்டிருக்கும்.

3. சாத்வீகம்: இக்குணம் பொய் கொலை களவு கோபம் நன்றிமறத்தல் வாயாடல் பழிகூறல் முதலிய குணங்களை கொண்டிருக்கும்.

**********

18)வினை 2


1. நல்வினை: புண்ணியம் தர்மம் முதலியவற்றை கொண்டிருக்கும்.

2. தீவினை: பாவம் கொலை களவு முதலியவற்றை கொண்டிருக்கும்.

**********
19) விகாரம் 81. காமம்: அதிக ஆசை

2. குரோதம்: சண்டை.

3. உலோபம்: ஈயாமை.

4. மதம்: கர்வம், மதியாமை.

5. மோகம்: பிற பெண்களின் மேல் ஆசை.

6. மாச்சரியம்: மனதில் விரோதம் வைத்தல்.

7.இடும்பை: உதாசீனம்.

8. அசூயை: பொறாமை.

**********
20) அவஸ்தை 51. சாக்கிரம்: (நனவுநிலை) இன்ப துன்பங்களை அனுபவித்தல். இடது நெற்றியில் ஒடுங்கும்.

2. சொப்பனம்: (கனவுநிலை) புலனும் பொறியும் இடம் கழுத்தில் நிற்பது.

3. சுழுத்தி: (மயக்கநிலை) அறிந்ததை பிறர்க்கு கூற முடியாத நிலை இருதயத்தில் நிர்ப்பது.

4. துரியம்: (வாசிநிலை) தொப்பூழ் கமலத்தில் அமைவது.

5. துரியாதீதம்: (பற்றற்றநிலை) உணர்வும் உலகப்பர்ரும் அறியாத நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக