பக்கங்கள்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

சூரிய கிரகணம்


       சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில்(conjunction) இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். முதலாவது முழு சூரிய கிரகணம் என்றும் பின்னர் கூறப்பட்டது பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும்; இதில் இரண்டு கிரகணங்கள் வரை முழு சூரிய கிரகணங்களாக அமையலாம் , சில ஆண்டுகள் முழு கிரகணம் ஒன்று கூட ஏற்படாமலும் போகலாம்...


நிலவின் கலைகள்

            பூமியை ஒருமுறை சுற்றி வர நிலவுக்கு 29 1/2 நாள்கள் ஆகின்றது. இவ்வாறு சுற்றி வருகையில் பல்வேறு கட்டங்களை புவியிலுள்ளோருக்கு அளிக்கிறது.

1.புது நிலவு (அமாவாசை)


2.புது பிறை (நான்காம் நாள்)

3.முதல் கால்பிறை (ஏழாம் நாள்)

4.வளர் முகிழ்மதி (பத்தாம் நாள்)

5.முழு நிலவு (பதிநான்காம் நாள்)

6.தேய் முகிழ்மதி (பதினெட்டாம் நாள்)

7.இறுதி கால்பிறை (இருபத்தியிரண்டாம் நாள்)

8.பழைய பிறை(இருபத்தியாறாம் நாள்)

9.மீண்டும் புது நிலவு (இருபத்தி ஒன்பதாம் நாள்)

       புது நிலவின் போது நிலவைக் காண இயலாது. ஏனெனில் பூமியை நோக்கியுள்ள நிலவுப்பகுதியின் மீது சூரியவொளி சிறிதும் படுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக